/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது
/
மஸ்கட்டில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது
மஸ்கட்டில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது
மஸ்கட்டில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது
நவ 28, 2025

மஸ்கட்டில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
மஸ்கட் :
மஸ்கட் இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார். அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டங்கள், பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தினம் அரசியலமைப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் இந்த கொண்டாட்டம் நடந்து வருகிறது. அரசியலமைப்பை வரைந்த அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் அரசியலமைப்பு தின கொண்டாட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.
'சம்விதான் திவாஸ்' என இந்தியில் இந்த கொண்டாட்டம் அழைக்கப்படுகிறது.
இந்த கொண்டாட்டத்தையொட்டி இந்திய தூதர் உறுதிமொழியை வாசிக்க அதனை பின்பற்றி தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் உறுதிமொழியை ஏற்றனர்.
-- நமது தினமலர் வாசகர் வெங்கட்
Advertisement

