sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் பேட்மிண் வாரியார்ஸ் அணி அசத்தல்

/

துபாயில் பேட்மிண் வாரியார்ஸ் அணி அசத்தல்

துபாயில் பேட்மிண் வாரியார்ஸ் அணி அசத்தல்

துபாயில் பேட்மிண் வாரியார்ஸ் அணி அசத்தல்


நவ 28, 2025

Google News

நவ 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் அனுமதியுடன், சர்வதேச விளையாட்டு கமிட்டியின் (AISC) கீழ் செயல்படும் என்கேஜ் ஸ்போர்ட்ஸ் அரேனா ஏற்பாடு செய்த பேட்மிண்டன் பிரிமியர் லீக் (BPL) 3.0 போட்டி, கடந்த 22 மற்றும் 23 தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்றது. போட்டியின் மேலாளராக ஜமால் பக்கர் செயல்பட்டார். இந்த லீகில் 6 போட்டிக் குழுக்கள் மற்றும் போட்டியாளர்கள் 5 பிரிவுகளாக பங்கேற்றனர்.


இதில், ஆல்பா மெட்டல்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான தமிழகத்தைச் சேர்ந்தமுகம்மது ஷாலி தலைமையிலான 'பேட்மிண் வாரியார்ஸ்' அணி சிறப்பாக விளையாடி மொத்தமாக உள்ள ஐந்து பிரிவுகளில், இரண்டு பிரிவுகளில் முதலிடம், ஒரு பிரிவில் இரண்டாம் இடம், மேலும் குழுவாரியான மொத்த தரவரிசையில் இரண்டாம் இடத்தையும் தக்க வைத்து, இந்த பி.பி.எல். 3.0 போட்டியில் சாதனை படைத்துள்ளது.


கேப்டன் ஸல்மான் மற்றும் துணை கேப்டன் இராமநாதபுரம் கான் முகமது ஆகியோரின் அசத்தலான ஆட்டமும், தலைமையும் மற்ற வீரர்களை சிறப்பாக வழிநடத்தியதும், வெற்றிக்கு முக்கிய வழிவகுத்தது. 'பெஸ்ட் பிரான்சைஸ் உரிமையாளர் 2025' விருதையும் முகம்மது ஷாலி மீண்டும் தக்க வைத்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2024 பி.பி.எல். 2.0 போட்டியிலும் இவரது அணி இரண்டாம் இடத்தையும், முகம்மது ஷாலி தனிப்பட்ட தரவரிசையில் 'பேர் பிளே விருது 2024' மற்றும் 'பெஸ்ட் பிரான்சைஸ் உரிமையாளர் 2024' விருதுகளையும் தக்க வைத்தது இவரது தொடர்ந்த ஈடுபாட்டின் சான்றாகும்.


“தொழில் துறையில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், பேட்மிண்டன் விளையாடுவது மட்டுமன்றி, தகுதியான விளையாட்டு வீரர்களை ஆதரிப்பது எனது உண்மையான ஆர்வம்,” என முகம்மது ஷாலி தெரிவித்தார். தகுதியான வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அவர்களின் பதிவு கட்டணம், பயிற்சி கட்டணம், விளையாட்டு சீரூடை, பரிசுத்தொகை, மட்டுமல்லாமல் பயிற்சி மற்றும் போட்டி நாட்களில் உணவு வசதி ஆகியவற்றையும் முகம்மது சாலி தனிப்பட்ட முயற்சியில் வழங்கி வருகிறார். தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான வீரர்கள் www.badminwarriors.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


“இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் தமிழக வீரர்களின் திறமை, துபாய் மண்ணில் 'பேட்மிண் வாரியார்ஸ்' வழியாக ஒளிரும்,” என முகம்மது ஷாலி நம்பிக்கை தெரிவித்தார். இந்த குழுவில் இணைய 050 628 2427 என்ற தொலைபேசி எண் அல்லது shaali33@gmail.com என்ற ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம். ஒரு தமிழனாக நாமும் ஷாலியை வாழ்த்துவதுடன் அவருடைய முயற்சிகளுக்கு துணை நிற்போம்!!


- துபாயிலிருந்து நமது வாசகர் சதீஷ்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us