/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இந்திய சேவையாளர் தமிழர் செந்தில்குமாரின் குவைத் பிரிவு உபசார கம்பீர விழா!
/
இந்திய சேவையாளர் தமிழர் செந்தில்குமாரின் குவைத் பிரிவு உபசார கம்பீர விழா!
இந்திய சேவையாளர் தமிழர் செந்தில்குமாரின் குவைத் பிரிவு உபசார கம்பீர விழா!
இந்திய சேவையாளர் தமிழர் செந்தில்குமாரின் குவைத் பிரிவு உபசார கம்பீர விழா!
ஜூலை 18, 2024

குவைத்தின் பிரபல தமிழர் நண்பர் Eng.P செந்தில்குமார் எதில் கை வைத்தாலும் அதில் ஒரு பிரும்மாண்டம் இருக்கும். வித்யாசம்—வினோதம்! புதுமை!அனைவரையும் அசத்துவதற்கென்றே பிறந்திருக்கிற அரிய மனிதர் அவர் !
குவைத் மற்றும் அமெரிக்காவில் வெற்றிகரமாய் இயங்கிவரும் EQUATE PETRO CHEMICAL கம்பெனியில் முக்கிய பொறுப்பு வகித்து இப்போது ஓய்வு பெற்றிருக்கிறார்.
Indian Frontliners சேவை அமைப்பின் துணைத்தலைவராக பல விதங்களில் தொண்டு செய்துவருபவர். மன்னார்குடியைச் சேர்ந்த திருச்சிவாசி!
தனது சேவைகளை தமிழகம் - இந்தியாவோடு நிறுத்திக்கொள்ளாமல் உலக அளவிலும் விரிவாக்கி வைத்திருப்பவர்.
கொரோனா கால கட்டத்தில் இந்தியன் பிரான்ட்லைனர்ஸ் அமைப்பில் ஒரு படையை திரட்டி இந்திய தூதரகத்துடன் சேர்ந்து இவர் ஆற்றிய பணி மெச்சத்தகுந்தது.
நவீனத்தையும், நம் பாரம்பர்ய கலாசாரத்தையும் செந்தில் சமவிகிதத்தில் கையாளுவது வியக்கவைக்கும். கலை - இலக்கிய - பண்பாடு விருந்தோம்பல் - மனிதாபிமானம் -எளிமை-பெற்றோர் மீது வைத்திருக்கும் பக்தி என இவரிடம் ஒவ்வொன்றுமே அசத்தல்!
இவர் எந்த அளவுக்கு இறங்கி வேலை செய்வார் - உதவுவார் என்பதை கணிக்கவே முடியாது. வேண்டியவர்களின் கல்யாணம் - காட்சி - விசேஷங்களில் நாடு விட்டு நாடு வந்தும் கூட வாழ்த்துபவர். அதேபோல பிறரின் கஷ்ட நஷ்டங்கள்- துக்கத்திலும் தம்பதி சகிதம் முதல் ஆளாக நிற்பார்!
செந்திலின் செயல்களில் ஒரு நேர்த்தி இருக்கும்.- நேர்மை! நாணயம்! எல்லாவற்றிலும் ஆத்மார்த்தத்தை வலியுறுத்துவார்.
எளிமை! விடாமுயற்சி! போலியின்மை- - பகட்டின்மை! தலைமை பண்பு --மனிதாபிமானத்துடன் கூடிய அணுகுமுறை! இலக்கியம்--அறிவியல்-சினிமா-விளையாட்டு- அரசியல் என நிறைய படிப்பவர்.எழுத்து மற்றும் பேச்சிலும் வித்தகர்.
குவைத்தில் இந்திய நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இவர் இருந்திருக்கிறார். எல்லாம் செய்திருந்தாலும் இவர் எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதில்லை.
திறமையானவர்களை கண்டறிந்து அவர்களை தூக்கிவிட்டு அழகுபார்ப்பவர். இப்படி இவர்களைப் பற்றி நிறையச் சொல்லலாம். அன்பான மனைவி பத்மாவதி, மகன் திவிஜ் & மகள் நிக்கி என இது ஒரு அற்புத குடும்பம்.
நட்பு வட்டம் குவைத்தில் பனி நிறைவு செய்து யார் ஊர் திரும்பினாலும் அவைகளை குடும்பத்துடன் வீட்டிற்கு அழைத்து கவுரவித்து விருந்தளித்து மெய்சிலிர்க்க வைப்பது இந்த தம்பதிகளின் வழக்கம்.
ஆனால்..
செந்தில்குமார் 28 ஆண்டுகள் குவைத்தில் பணி நிறைவு செய்து ஊர் திரும்பும் போது பிரிவு விழா நடத்த எவரையும் அனுமதிக்க வில்லை. மாறாக, இவரே எல்லோரையும் அழைத்து பல பிரிவுகளாக விருந்தளித்து மகிழ்ந்தது அனைவரையும் அன்பால் ஆக்ரமித்திருக்கிறது.
அதிலும் இந்தியர்கள் மட்டுமின்றி, குவைத் ஷேக்குகளும் பிரியமுடன் வந்து கலந்துக்கொண்டது மாபெரும் சிறப்பு.
குவைத்தில் Blu Radisson ஹோட்டலில் நடந்த பிருமாண்ட பிரிவு உபசாரவிழாவில் இவருடன் பணியாற்றிய Team Leaders & Incharge officer's என குவைத்தி நேஷனல் நண்பர்களை (20க்கும் மேற்பட்டோரை + 250 இந்தியர்கள்) அழைத்து அனைவரையும் மரியாதை செய்தார்.
விழாவில் பரதநாட்டியம் + நடனம் + பாடல்கள் என நட்பு வட்டம் தானாகவே முன்வந்து ஆடி,பாடி அனைவரையும் மகிழ்வித்தது.
நிகழ்வில் செந்தில்குமார் கடந்து வந்த பாதை படமாக ஒளிபரப்பட்டது.
அத்துடன்,
தனது குவைத் நிறைவு நாள் விழாவில் இந்தியன் ஃபிரண்ட் லயனர்ஸ் (IFL) அமைப்பிற்கு (குவைத்திலும் இந்தியாவிலும் ஏழை-எளியோருக்குஉதவ வேண்டி ) ரூபாய் 10 லட்சம் வழங்கி இருக்கிறார். அப்படி ஒரு உன்னத மனிதர் இந்தியர்களுக்கு ஒரு பெருமை.
சுருக்கமாக சொல்லணும் என்றால் .. செந்தில்குமாரின் பணி நிறைவு குவைத்திற்கு ஒரு இழப்பு . அதே சமயம் இந்தியாவிற்கு பெரும் லாபம்!
-என்.சி.மோகன்தாஸ், குவைத்திலிருந்து செல்லதுரை
Advertisement