/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத் இந்திய தூதரகத்தில் இந்திய மாணவர்கள்
/
ரியாத் இந்திய தூதரகத்தில் இந்திய மாணவர்கள்
ஜூலை 22, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரியாத் : சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அந்த நாட்டு கல்வித்துறை அமைச்சத்தின் சார்பில் 56வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து மாணவர்கள் குழுவினர் ரியாத் சென்றனர்.
அங்குள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி மொய்ன் அக்தரை சந்தித்து பேசினர். அவர்களை தூதரக அதிகாரி உற்சாகத்துடன் வரவேற்றார். மேலும் ஒலிம்பியாட்டில் சிறப்பான முறையில் பங்களித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வாழ்த்தினார். அதனை தொடர்ந்து இந்திய தூதரகத்தை அவர்கள்பார்வையிட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement