/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் இஸ்லாமிய புத்தாண்டையொட்டி சிறப்பு சொற்பொழிவு
/
குவைத்தில் இஸ்லாமிய புத்தாண்டையொட்டி சிறப்பு சொற்பொழிவு
குவைத்தில் இஸ்லாமிய புத்தாண்டையொட்டி சிறப்பு சொற்பொழிவு
குவைத்தில் இஸ்லாமிய புத்தாண்டையொட்டி சிறப்பு சொற்பொழிவு
ஜூலை 22, 2024

குவைத் : குவைத்தில் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் சார்பில் இஸ்லாமிய புத்தாண்டையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குவைத் நகரின் கைதான், அப்பாஸியா, சல்மியா, மஹ்பூலா மற்றும் பஹாஹீல் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் மார்க்க அறிஞர் சரபுதீன் சூஃபி, குர்ஷித் கான், நிசார் அஹமது உள்ளிட்டோர் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் தலைவர் மௌலானா முஹம்மது உமர் ஃபலாஹி தலைமையிலான குழுவினர் இந்த நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர்.
இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement