/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜெத்தாவில் இசைமழை - ராக தாள லயம்
/
ஜெத்தாவில் இசைமழை - ராக தாள லயம்

ஜெத்தா ஷரபியாவில் உள்ள சபாய்ர் அரங்கத்தில் நடைபெற்ற 'ராக தாள லயம்' என்ற இன்னிசை நிகழ்ச்சி, இசை ரசிகர்களின் உள்ளங்களை உற்சாகத்தால் நிரப்பியது. மியூசிக்கல் ரெயின் அமைப்பின் சார்பில், முக்கிய பிரமுகர்கள் ஹசன் கொண்டோட்டி மற்றும் யூசுப் கோட்ட ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியை மிகுந்த அழகுடன் நடத்தினர்.
ஜெத்தாவின் பின்னணி பாடகர்கள் வழங்கிய குரலிசை, தரமான ஒழுங்கமைப்பு, மேடை அமைப்பு மற்றும் ஒளி ஒலி அமைப்பின் நுணுக்கம் என அனைத்து அம்சங்களும் இசை விழாவை ஒரு மனமகிழ்ச்சியான அனுபவமாக மாற்றின. நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர், இசையின் வரவேற்பால் பரவசமடைந்து பாராட்டுகளைக் கொட்டினர்.
பழைய மற்றும் புதிய மெல்லிசை பாடல்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, சுத்த சங்கீதத்தை விரும்பும் ரசிகர்களுக்கு ஒரு இனிமையான சங்கீத அனுபவத்தை பரிமாற ஜெத்தாவின் பின்னணி பாடகர்கள், தங்கள் சீரான குரல் வளத்தால் ஒவ்வொரு பாடலையும் உயிர்ப்பிக்க, பழைய நினைவுகள் மனதில் வந்து போனதை இசை நேசிகள் பெரிதும் விரும்பினர்
ஜமால் பாஷா, ஆஷா ஷிஷு, ஆகியோருடன் இணைந்து சலீம் நிலம்பூர், பைஜூ தாஸ், நூஹு பீமா பள்ளி, மும்தாஜ் அப்துல் ரஹ்மான், விஜேஷ் சந்துரு, மருத்துவர் மொஹம்மத் ஹாரிஸ், ஹக்கீம் அரும்பறா, ரஹீம் காக்கூர், ராபி ஆலுவா. ஆஷ்னா அப்சல், ரம்யா ப்ருஸ், பீகம் கதீஜா, ஹாபிஸ் மற்றும் ரைசாவும் இனிய பாடல்கள் பாடி மக்களை மகிழ்வித்தனர்.
ஜெத்தா கேரளா பவுராவளி தலைவரும் ஜெத்தா ஊடக மன்ற தலைவருமாகிய கபீர் கொண்டோட்டி நிகழ்வை திறந்து வைத்தார். இனிமையான பாடல்களை மட்டும் பாடி இசை மழை என்ற பேர் உண்மையாகும் விதத்தில் ஜெத்தா பின்னணி பாடகர்களின் ஒற்றுமை பறை சாற்ற இந்த மாதிரி பாடல் நிகழ்ச்சிகள் வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜெத்தாவின் பல்வேறு துறைகளில் உள்ள பிரபலமான நபர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் M Siraj
Advertisement