/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் பாடல் போட்டி
/
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் பாடல் போட்டி
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் பாடல் போட்டி
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் பாடல் போட்டி
பிப் 08, 2025

அல்-அசா தமிழ் சங்கத்தின் சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கீதம் பாடல் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் தேசபற்றை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாடர்ன் பன்னாட்டு பள்ளியின் முதல்வர் முஹம்மது ரசா அல் ரசீத் பங்கேற்று, வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி, அனைவரையும் பாராட்டி கவுரவித்தார்
இந்திய தேசிய கீதம் பாடல் போட்டி குடியரசு தின கொண்டாட்டங்களின் முக்கிய பகுதியாக அமைந்து . 'ஜன கண மன' என்ற நாட்டின் பெருமையை போற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரது அர்ப்பணிப்பு மற்றும் உற்சாகம் பாராட்டத்தக்கது.
வெற்றியாளர்கள் பட்டியல்: குழு A முதல் இடம்: ஷாஹித் சிராஜுதீன் (மாடர்ன் இன்டர்நேஷனல் பள்ளி, அல்-அசா) இரண்டாம் இடம்: ஆதிதி சோலயில் பாலு (அல் நதா இன்டர்நேஷனல் பள்ளி, அல்-அசா) ஏ. ஃபாஹிமா (கிரஸெண்ட் மெட்ரிகுலேஷன் & நர்சரி பள்ளி, பெரம்பலூர், தமிழ்நாடு) மூன்றாம் இடம்: பிரஜித் ஸ்ரீ (மாடர்ன் இன்டர்நேஷனல் பள்ளி, அல்-அசா)
குழு B முதல் இடம்: அன்னா சாரா பினு (மாடர்ன் இன்டர்நேஷனல் பள்ளி, அல்-அசா) லிதர்ஷனா ஸ்ரீ ராஜா (IISD, தம்மாம்) இரண்டாம் இடம்: தவனி சங்கர்நாத் (மாடர்ன் இன்டர்நேஷனல் பள்ளி, அல்-அசா) கௌசிக் ஜெய்கணேஷ் (IISD, ராகா, அல்கோபார்) மூன்றாம் இடம்: பவித் ஸ்ரீ (மாடர்ன் இன்டர்நேஷனல் பள்ளி, அல்-அசா)
குழு C முதல் இடம்: கனிஷ்கா திவாகர் (இன்டர்நேஷனல் இந்தியன் பள்ளி, தம்மாம்) இரண்டாம் இடம்: ஸ்ரீராம் ரமேஷ் (மாடர்ன் இன்டர்நேஷனல் பள்ளி, அல்-அசா) மூன்றாம் இடம்: ஸ்ருதி ரம்யா ராஜா (IISD, தம்மாம்) முகமது ஜஸ்மில் (மாடர்ன் இன்டர்நேஷனல் பள்ளி, அல்-அசா)
வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! குழந்தைகளின் அர்ப்பணிப்பு மற்றும் திறமை இந்த நிகழ்வின் தேசபற்றை சிறப்பாக எடுத்துக் காட்டியது. பங்கேற்ற அனைவருக்கும் நன்றி! இந்த போட்டியில் பங்கேற்ற அனைவரது முயற்சியும், நாட்டிற்கான அன்பும் பாராட்டத்தக்கது. குழந்தைகளை ஊக்குவித்து, அவர்களின் தேசப்பற்று உணர்வை வளர்த்த பெற்றோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்த சிறப்பான நிகழ்வை ஒருங்கிணைத்தவர்கள்: அசோக் பிரசன்னா-- மஞ்சுளா, சுரேஷ்- -மான்விழி, செந்தில் வடிவேல்- -ஸ்ரீதேவி, பவானி- -ரமேஷ் அனிஷ் போட்டியின் திட்டமிடல் மற்றும் நடுவர்கள் பணியை திறம்பட செயல்படுத்திய ரமேஷ் ராஜ்-- சூரியபிரபாவுக்கு நன்றி. சவுதி அரேபியாவில் உள்ள தமிழ் சங்கங்களின் ஒத்துழைப்புடன், சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழா மிகுந்த வெற்றி பெற்றது.
நம் தேசிய ஒற்றுமையையும், கலாச்சாரப் பெருமையையும் தொடர்ந்து கொண்டாடுவோம்! இந்தியாவின் பெருமையை உலகெங்கும் பரப்புவோம்! அன்புடன், அல்-அசா தமிழ் சங்கம் நிர்வாகிகள், சவூதி அரேபியா
- நமது செய்தியாளர் பொறியாளர் காஜா மைதீன்
Advertisement