/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
நஜ்ரன் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா
/
நஜ்ரன் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா
ஜன 20, 2026

நஜ்ரன் தமிழ் மன்றம் சார்பில் பொங்கல் விழா
நஜ்ரன், ஜனவரி 16, 2026 - நஜ்ரன் தமிழ் மன்றம் (NTM) சார்பில் மூன்றாவது ஆண்டு பொங்கல் விழா சிறப்பாகக்கொண்டாடப்பட்டது. தை மாதப் பிறப்பையொட்டி நடைபெற்ற இவ்விழாவில் தமிழ் , பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. சவுதி அரேபியாவில் உள்ள தமிழ் சமூகத்தினர் மத்தியில் உறவையும், பாரம்பரியத்தையும் பேணும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
நிகழ்ச்சியில், கயிறுஇழுத்தல், உறியடி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன. பெண்கள் ஒன்று கூடிபுதுப்பானையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர்.
விழாவின் தொடக்கமாக, தமிழ்ப் பண்பாட்டின்அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நஜ்ரன்தமிழ் மன்றத்தின் நிறுவனர் டாக்டர் உமாபதி தனதுஉரையில், நஜ்ரன் பகுதியில் தமிழ் சமூகத்தைஒன்றிணைக்கத் தொடங்கப்பட்ட இந்த மன்றத்தின் வளர்ச்சிகுறித்துப் பேசினார். மன்றத்தின் தலைவர் டாக்டர் மகேஸ்வரிகணேசன் ஆற்றிய தலைமையுரையில் தைத்திருநாளின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளுக்கும்இயற்கைக்கும் நாம் செலுத்த வேண்டிய நன்றியையும்வலியுறுத்தினார். மன்றத்தின் செயலாளர் பொறியாளர்சோனைராஜா ஆற்றிய உரையில், மன்றத்தின்வருடாந்திர செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்குறித்து விளக்கமளித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, விழாவின் தலைமை விருந்தினர் ஜித்தாவிற்கானஇந்திய துணைத் தூதர் (Consul Genral of India, Jeddah) ஃபஹத் அஹமது கான் சூரி காணொலி வாயிலாக உரையாற்றினார் . புலம்பெயர்தமிழர்களை ஒன்றிணைக்கும் இவ்விழாவைப் பாராட்டிய அவர், பொங்கல் போன்ற கொண்டாட்டங்கள் நமது கலாச்சாரப்பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, சவுதி அரேபிய வாழ்இந்தியர்களிடையே 'வேற்றுமையில் ஒற்றுமை' என்றஅடையாள உணர்வை வளர்ப்பதாகத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து விழாவின் மற்றொரு தலைமை விருந்தினர் சவுதி அரேமியா தமிழ்ச்சங்களின்கூட்டமைப்பின் தலைவர் பொறியாளர் காஜா மைதீன் அவர்கள், வெளிநாட்டில் வாழும் இளையதலைமுறைக்குத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின்ஆழமான வேர்களைக் கடத்துவதன் அவசியத்தைவலியுறுத்தினார். குறிப்பாக, இச்சமூக நிகழ்வில் பிற இந்தியசமூகங்கள் மற்றும் அண்டை மாநிலத்தவர்களின்பங்கேற்பு குறித்தும் குறிப்பிட்டு, சவுதி இந்திய சமூகத்தின்வலுவான பிணைப்பைப் பாராட்டினார்.சிறப்பு விருந்தினர் டாக்டர். ஜெயசங்கர் டெட்லா, வெவ்வேறு மொழி பேசும் பின்னணியைச் சேர்ந்தவர்கள் ஒரேகலாச்சார நிகழ்வைக் கொண்டாட ஒன்றிணைந்த சூழலைஏற்படுத்திய நஜ்ரன் தமிழ் மன்றத்தைப் பாராட்டினார்.
விழாவின் ஒரு பகுதியாக, திருவள்ளுவர்தினத்தை முன்னிட்டுச் சிறுவர் சிறுமிகள் பலர்ஆர்வமுடன் திருக்குறளை ஒப்புவித்தனர், இதுஅனைவரின் பாராட்டையும் பெற்றது. பறை ஆட்டம், கும்மிஆட்டம், ஒயிலாட்டம், சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. இரவு வரை நீடித்த இந்த கொண்டாட்டங்கள், பரிசளிப்புவிழாவுடன் இனிதே நிறைவுபெற்றன. நிகழ்ச்சியின் நிறைவாக முத்துக்குமார் நன்றி கூறினார். இந்த விழாவினை டாக்டர் ஜாய்ஸ் தொகுத்து வழங்கினார்.
Advertisement

