sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜாவில் கவிதை நூல் வெளியீடு

/

ஷார்ஜாவில் கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் கவிதை நூல் வெளியீடு


நவ 09, 2024

Google News

நவ 09, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்து வரும் 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இதில் அமைந்துள்ள யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் அரங்கில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் பரமக்குடி கவிஞர் இதயா எழுதிய 'அகர மலர்கள்' கவிதை நூலை கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஆ. முகமது முகைதீன் வெளியிட அதன் முதல் பிரதியை இஸ்லாமிய இலக்கியக் கழக பொருளாளர் ஷாஜஹான் பெற்றுக் கொண்டார்.


அப்போது பேசிய முனைவர் ஆ. முகமது முகைதீன் தனது உரையில் கவிஞர் இதயா ஆங்கில ஆசிரியராக இருந்தாலும், அவரது கவிதை நடையும், சொல்லாட்சியும், எழுத்தும் இணையற்றது. அவரது கவிதைகள் உணர்ச்சிகள், உறவுகள், பல்வேறு சூழ்நிலைகளின் நேர்த்தியான கலவையாகும். அகர மலர்கள் மனித இதயத்தின் ஆழத்தை தொடுகின்றன என்றார்.


நிகழ்வில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், நூல் குடில் பதிப்பகத்தின் மெய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us