/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் இந்திய பணிப்பெண்களுக்கு தீபாவளி இனிப்புகள்
/
மஸ்கட்டில் இந்திய பணிப்பெண்களுக்கு தீபாவளி இனிப்புகள்
மஸ்கட்டில் இந்திய பணிப்பெண்களுக்கு தீபாவளி இனிப்புகள்
மஸ்கட்டில் இந்திய பணிப்பெண்களுக்கு தீபாவளி இனிப்புகள்
நவ 06, 2024

மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய பணிப்பெண்களுடன் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஏஜெண்டுகள் மூலம் வேலைக்காக சென்று ஏமாற்றப்பட்ட பெண்கள் இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த பெண்களுக்கு இந்திய தூதரக அதிகாரி இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் விரைவில் இந்தியாவுக்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்படுவர். வேலைக்காக வெளிநாடுகளுக்கு வருபவர்கள் முறையான விசாவுடன் வரவேண்டும். விசா உள்ளிட்ட விபரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் அல்லது இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இதன் மூலம் இத்தகைய பாதிப்புகளை தவிர்க்க முடியும் என்றார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement