sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ரமழான் மாத விசேட நிகழ்ச்சி

/

ரமழான் மாத விசேட நிகழ்ச்சி

ரமழான் மாத விசேட நிகழ்ச்சி

ரமழான் மாத விசேட நிகழ்ச்சி


மார் 08, 2026

Google News

மார் 08, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத்தில் தமிழ் தஃவா ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ரமழான் மாத விசேட நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாலை 5.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் முஸ்லிம்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


மாலை 5.30 மணிக்கு மௌலவி ஜமாலுத்தீனின் இஃப்தார் உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதன் பின்னர் 5.58 மணிக்கு நோன்பு திறத்தல் நடைபெற்றதுடன், 6.30 மணிக்கு மக்ரிப் தொழுகை நடத்தப்பட்டது. தொடர்ந்து மௌலவி அப்துல்லாஹ் உவைஸ் (PhD) ஆரம்ப உரை இடம்பெற்றது.


இரவு 8.15 மணிக்கு இஷா மற்றும் தராவீஹ் தொழுகைகள் நடைபெற்றன. பின்னர் மௌலவி முஹம்மத் ரஹ்மானி யின் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றது. இரவு 10.15 மணிக்கு கலந்து கொண்டவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து மௌலவி நவ்ஷாத் பரீத் மற்றும் மௌலவி பெரோஜ் அக்ரம் ஆகியோரின் வழிநடத்தலில் அறிவுக் கலஞ்சியம் என்ற வினாடி வினா போட்டி நடைபெற்றது. மேலும் சிறுவர்களுக்கான அல்குர்ஆன் போட்டி நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து அதிகாலை 1.30 மணிக்கு மௌலவி அன்சார் ஹுசைன் ஃபிர்தௌசியின் விசேட உரையும், 2.30 மணிக்கு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசு விநியோகம் நடைபெற்றதுடன், மௌலவி ஜஃபருல்லாஹ் அப்துல் ஹாதி நன்றியுரையாற்றினார்.


நிகழ்ச்சியின் இறுதியாக அதிகாலை 3.15 மணிக்கு கலந்து கொண்ட அனைவருக்கும் சஹர் உணவு வழங்கப்பட்டது.


இந்த ரமழான் சிறப்பு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும் மனநிறைவாகவும் இருந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியை சிறப்பாக திட்டமிட்டு ஏற்பாடு செய்த தமிழ் தஃவா ஒன்றியத்தின் முயற்சிகளை அனைவரும் பாராட்டியதுடன், இதற்காக பங்காற்றிய அனைவருக்கும் இறை அருள் பெருக பிரார்த்தனை செய்தனர்... மேலும் இப்படியான நல்ல பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.


- ரியாத்திலிருந்து நமது வாசகர் ஆரிப் அப்துல் சலாம்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us