sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் பணிபுரியும் தமிழக பேராசிரியருக்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக உயரிய விருது

1

மார் 08, 2026

Google News

மார் 08, 2026

1

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : தமிழகத்தை சேர்ந்த பேராசிரியருக்கு ஆஸ்திரேலியா கர்டின் பல்கலைக்கழகம் ஜான் கர்டின் சிறப்பு பேராசிரியர் பதவி (John Curtin Distinguished Professor) என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரி இயந்திரவியல் துறையின் முன்னாள் மாணவர் பேராசிரியர் சித்திரைபொன் செல்வன். இவர் அதியமான் இன்ஜினியரிங் கல்லூரியில் இயந்திரவியல் துறையில் இலநிலை மற்றும் முதுநிலை பொறியியல் பட்டம் பெற்று உலகின் தலைசிறந்த ஆஸ்திரேலியா கர்டின் பல்கலைக்கழகத்தின் துபாய் வளாகத்தில் ஆராய்ச்சி துறையின் இயக்குநர் மற்றும் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இதுவரை 175-க்கும் அதிகமான ஆராய்ச்சி கட்டுரைகளை உலகின் தலைசிறந்த இதழ்களில் வெளியிட்டு ஆராய்ச்சி துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தமிழகத்தை சேர்ந்த இவருக்கு ஆஸ்திரேலியா கர்டின் பல்கலைக்கழகம் ஜான் கர்டின் சிறப்பு பேராசிரியர் பதவி (John Curtin Distinguished Professor) என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

சமீபத்தில் அதியமான் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறையின் தலைவர் பேராசிரியர் அறிவுடைநம்பி நேரடியாக துபாய் வந்து கர்டின் பல்கலைக்கழகம், துபாய் பேராசிரியர் சித்திரைபொன் செல்வனைச் சந்தித்து, அதியமான் பொறியியல் கல்லூரி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, பேராசிரியர் சித்திரைபொன் செல்வன், அறிவுடைநம்பி அவரிடம் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு முழு உதவி மற்றும் ஆதரவு வழங்குவேன் என்று உறுதியளித்தார்

- துபாயிலிருந்து நமது வாசகர் மணிகண்டன்

Advertisement

Advertisement

Balaji S.K.

மார் 10, 2026 12:17

Congrats Dr. Chithirai Pon Selvan on this great achievement. God bless you. When you were working at ACE during 1998–2002, I was a Production Engineering student 1998–2002 batch. I am currently working as a Project Manager in the water sector in Abu Dhabi. I was really very happy to see you along with Dr. Nambi. Truly proud and delighted.

Rate this

Trending

வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in

      Dinamalar
      Follow us