sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ரியாத் சனய்யா தொழிலாளர் முகாமில் RIA அமைப்பின் மனிதாபிமான உதவி

/

ரியாத் சனய்யா தொழிலாளர் முகாமில் RIA அமைப்பின் மனிதாபிமான உதவி

ரியாத் சனய்யா தொழிலாளர் முகாமில் RIA அமைப்பின் மனிதாபிமான உதவி

ரியாத் சனய்யா தொழிலாளர் முகாமில் RIA அமைப்பின் மனிதாபிமான உதவி


மார் 18, 2026

Google News

மார் 18, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத் சனய்யா தொழிலாளர் முகாமில் RIA அமைப்பின் மனிதாபிமான உதவி
​சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் மனிதாபிமான சேவைகளை ஆற்றி வரும் ரியாத் இந்தியன் அசோசியேஷன் (RIA), தற்பொழுது மற்றுமொரு உன்னத உதவியைச் செய்துள்ளது.​ரியாத் சனய்யா பகுதியில் உள்ள தொழிலாளர் முகாம் ஒன்றில் தங்கியுள்ள சுமார் 60 தொழிலாளர்கள், பல மாதங்களாக ஊதியம் கிடைக்காத நிலையில், அன்றாட உணவிற்கே வழியின்றித் தவித்து வந்தனர். இவர்களின் அவலநிலை குறித்துத் தகவல் அறிந்த ரியா அமைப்பின் நிர்வாகிகள், உடனடியாக அந்த முகாமிற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
​இதனைத் தொடர்ந்து, கடந்த 13-03-2026 அன்று, பாதிக்கப்பட்ட அந்த 60 தொழிலாளர்களுக்கும் ஒரு மாதத்திற்குத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் மற்றும் இஃப்தார் கிட்கள் வழங்கப்பட்டன. ரியா அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் இந்தப் பணியினை முன்னின்று ஒருங்கிணைத்தனர்.​வேலையின்றி, உணவின்றித் தவித்த தங்களுக்கு இக்கட்டான சூழலில் கைகொடுத்து உதவிய ரியா அமைப்பிற்கும், அதன் உறுப்பினர்களுக்கும் அந்த முகாம் தொழிலாளர்கள் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
--நமது செய்தியாளர் ஆரிப் அப்துல் சலாம்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us