/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ரியாத் சர்வதேச இந்திய பள்ளி தலைவராக தமிழர் ராஜதுரை தேர்வு
/
ரியாத் சர்வதேச இந்திய பள்ளி தலைவராக தமிழர் ராஜதுரை தேர்வு
ரியாத் சர்வதேச இந்திய பள்ளி தலைவராக தமிழர் ராஜதுரை தேர்வு
ரியாத் சர்வதேச இந்திய பள்ளி தலைவராக தமிழர் ராஜதுரை தேர்வு
மார் 17, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச இந்தியப் பள்ளியின் (IISR), 2026-ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவராக (Chairman) தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ராஜதுரை தேர்வு செய்யப்பட்டார்.
ரியாத் சர்வதேச இந்தியப் பள்ளி புதிய சேர்மானாக தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ராஜதுரை தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்தன.
கடந்த 16-03-2026 அன்று தமிழ் கலாச்சாரக் கழகம் (TCS) மூத்த நிர்வாகிகள் சாகுல் ஹமீது, மாலிக் இப்ராஹீம், அலெக்ஸ், ஆதம் மாலிக் மற்றும் ரியாத் தமிழ் பெற்றோர்கள் மன்றத்தின் (Riyadh Tamil Parents Forum) நிர்வாகிகள் ஆரிப் அப்துல்சலாம், சிவபிரகாசம், IISR ராஜதுரையை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவது, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, மற்றும் பெற்றோர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளும் பரிந்துரைகளும் புதிய தலைவரிடம் முன்வைக்கப்பட்டன.
அனைத்துப் பரிந்துரைகளையும் கேட்டறிந்த ராஜதுரை, தனது பதவிக் காலத்தில் ரியாத் சர்வதேச இந்தியப் பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தான் உறுதுணையாக இருப்பேன் என்றும், குறிப்பாகத் தமிழ்ச் சமூக மாணவர்களின் கல்வி மற்றும் இதர முன்னேற்றங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
- ரியாத்தில் இருந்து ஆரிப் அப்துல் சலாம்
Advertisement

