sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக அரங்குகள்: தாமரை பிரதர்ஸ் பதிப்பித்த புத்தகங்களை வாங்கலாம்!

/

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக அரங்குகள்: தாமரை பிரதர்ஸ் பதிப்பித்த புத்தகங்களை வாங்கலாம்!

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக அரங்குகள்: தாமரை பிரதர்ஸ் பதிப்பித்த புத்தகங்களை வாங்கலாம்!

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக அரங்குகள்: தாமரை பிரதர்ஸ் பதிப்பித்த புத்தகங்களை வாங்கலாம்!


நவ 10, 2025

Google News

நவ 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தமிழக அரங்குகள்: தாமரை பிரதர்ஸ் பதிப்பித்த புத்தகங்களை வாங்கலாம்! ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் ஹால் எண் 7 ல் அமைந்துள்ளன.
இதில் என்.கே. நாதன் பதிப்பகத்தில் தினமலர் நாளிதழின் சார்பு நிறுவனமான தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவன வெளியீடுகளான புலவர் புராணம், பச்சைப் புடவைக்காரி, ஊட்டி, உலக நாகரீகங்களில் ஓர் உலா, நுரையீரல் அறிந்ததும் அறியாததும், சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் கரிகாலன் சபதம் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த டிஸ்கவர் புக் பேலஸ் இசட்.சி.5, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் இசட்.சி.6, சிந்தனை விருந்தகம், இசட.பி. 10, என்.கே. நாதன் பதிப்பகம் இசட்.பி. 11 ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன்.
தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் இசட்.பி.15, சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி இசட்.பி.16 ஆகிய அரங்குகளில் முதல் முறையாக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு புத்தகங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
அமீரகத்தில் வசித்து வரும் தமிழ் அன்பர்கள் இந்த புத்தக கண்காட்சியை பார்வையிட்டு தமிழ் நூல்களை வாங்கி ஆதரவு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கண்காட்சி தொடர்பான விபரங்களை பெற 050 5196433 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வரும் 16 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
----ஷார்ஜாவில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us