/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் தமிழர்கள் குடும்பத்தோடு பங்குபெற்ற மாபெரும் எறிபந்து போட்டி

மே 28, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கத்தார் தமிழ் இளைஞர் விளையாட்டுச் சங்கம் நடாத்திய மாபெரும் எறிபந்து (THROW BALL) போட்டியானது கடந்த 24 ம் தேதி தமிழ் இளைஞர் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் GSR.சத்தியராஜ் அவர்களின் தலைமையில் ஈரானிய பாடசாலை அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியானது ஆண்கள், பெண்கள் என 11 குழுக்களாக நடைபெற்றது. இப்போட்டியிலே கத்தாரில் உள்ள முக்கியஸ்தர்கள், கத்தாரில் உள்ள தமிழ் அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பலர் குடும்பமாக 700க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்கள்.
இப்போட்டியிலே பெண்கள் குழுவில் Tamil stunner Queens A அணி முதலாம் இடத்தை பெற்று சாம்பியனானது. இரண்டாம் இடத்தை Tamil stunner Queens B அணி பெற்றுக்கொண்டதோடு மூன்றாவது இடத்தை Qatar Singa Pengal அணி பெற்றுக்கொண்டது.
மேலும் ஆண்கள் குழுவில் Tamil stunner kings அணி முதலாம் இடத்தைப் பெற்று சாம்பியனானது. இரண்டாம் இடத்தை Qatar Tamil Fighters அணி பெற்றுக்கொண்டது. மேலும் இப்போட்டியிலே பார்வையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன- தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்
Advertisement