/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூரில் ஆடி வெள்ளி விழா கோலாகலம்
/
சிங்கப்பூரில் ஆடி வெள்ளி விழா கோலாகலம்
ஜூலை 21, 2025

சிங்கப்பூர் ஆலயங்களில் ஆடி வெள்ளி விழா கோலாகலமாக நடைபெற்றது. மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகத்திற்குப் பிறகு புதுப் பொலிவுடன் திகழும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ அம்பிகைக்கு காலையில் அபிஷேகம், அலங்காரம் ஆராதனைகள் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன. மாலையில் ஸ்ரீ அம்பிகை காதம்பரி ( காய் - கனி) அலங்காரத்தில் ஜொலித்தது மெய்சிலிர்க்க வைத்தது.
மும்மாரி பொழிந்து உயிர்க் குலம் செழித்து வாழ்ந்ததைக் குறிப்பதாக தலைமை அர்ச்சகர் ஆலயப் பிரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் விளக்கினார். மாலையும் சர்வ அலங்கார நாயகியாக ஸ்ரீ அம்பிகை ஆலயம் வலம் வந்த போது பக்தப் பெருமக்கள் ' ஓம் சக்தி.... பராசக்தி என விண்ணில் முழங்கினர். பங்கேற்ற அனைவருக்கும் அருட்பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. சுரேஷ் குமார் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்
Advertisement