
சிங்கப்பூரில் ஸாக் ஸலாம் இந்தியா எக்ஸ்போ என்ற இந்திய தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களைக் கொண்ட பெரிய கண்காட்சி ஆகும். இஃது 'இந்தியாவின் உணர்வை' சிங்கப்பூரில் கொண்டாடுகிறது. இந்தக் கண்காட்சியில் இந்திய உணவு திருவிழா, இந்திய திருவிழா, கருத்தரங்கு மற்றும் கலாச்சார விழா ஆகியவை அடங்கும். 200 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சிக்கு வருகை தந்தனர்.
இதில் முக்கிய அங்கமாக ஸாக் சமூக விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய தனிநபர்கள் மற்றும் தலைவர்களைக் கொண்டாடும் ஓர் அர்த்தமுள்ள முயற்சியாகும். இந்த விருதுகள் சிறப்பானவை, ஏனெனில் அவை பல்வேறு துறைகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த பங்களிப்புகளைப் பாராட்டுகின்றன. இத்தகைய அங்கீகாரம் மிகவும் முக்கியமானது. சமூகச் சேவையாளர்களுக்கு, இது போன்ற விருதுகள் தொடர்ச்சியான ஊக்கத்தையும் உந்துதலையும் வழங்குகின்றன.
அவை இந்த அர்ப்பணிப்புள்ள தனிநபர்களுக்கு மீண்டும் ஆற்றலைத் தந்து, சமூக நலனுக்காக இன்னும் அதிக உத்வேகத்துடனும் ஆர்வத்துடனும் தங்கள் முக்கியப் பணிகளைத் தொடர அவர்களை ஊக்குவிக்கின்றன. அந்த வகையில் ஜூலை 10 முதல் 13 வரை நான்கு நாட்கள் நடந்த ஸாக் சலாம் இந்தியாவின் 39வது பதிப்பில, தமிழர் பேரவைத் தலைவர் பாண்டியன், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மில்லத் அகமது, ஹவ்காங் இந்தியர் நற்பணிச் செயற்குழு நஸிர் அகமது, சர்வமத நல்லிணக்கப் பேச்சாளர் நஷாத் பஹீமா, சிங்கைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் விஜி ஜெகதீஷ், தக்கலை முஸ்லிம் சங்கத் தலைவர் முஹம்மது மீரான் ஆகியோருக்கு ஸாக் குழுமத் தலைவர் செய்யது ஜாகிர் அகமது மற்றும் சிங்கப்பூர் மலாய் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை தலைவர் அப்துல் மாலிக் ஹசன் ஜாக் சமூக விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்.
நம் செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement