sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

சிங்கப்பூர்

/

செய்திகள்

/

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

/

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா


ஜூலை 07, 2025

Google News

ஜூலை 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கப்பூரின் பிரபல கவிமாலைக் கவிஞர் தியாக ரமேஷ் எழுதிய “ மனமது செம்மையானால் “ நூல் வெளியீட்டு விழா சிங்கப்பூர் தேசிய நூலக ஐந்தாம் தளத்தில் அரங்கம் நிறை நிகழ்வாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. கவிமாலைக் காப்பாளர் மூத்த கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் நிகழ்விற்குத் தலைமை ஏற்றுச் சிறப்பித்தார். மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தலைவர் ரவீந்திரன் கணேசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிகழ்வுக்குப் பெருமை சேர்த்தார்.


சிங்கப்பூரின் பழம்பெரும் அமைப்பான மாதவி இலக்கிய மன்ற மதியுரைஞர் மூத்த சமூகத் தலைவர் டாக்டர் என்.ஆர்.கோவிந்தன் நூலினை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கி கவுரவித்தார். பலத்த கரவொலிக்கிடையே கவிமாலை அமைப்பின் துணைத் தலைவர் முனைவர் கி.திருமாறன் முதல் நூலைப் பெற்றுக் கொண்டார். கவிஞர் சி.கருணாகரசு வாழ்த்துப் பா வாசிக்க கவிஞர் தேன்மொழி அசோக் நூலாசிரியரின் மரப்பாச்சி பொம்மைகள் கவிதைத் தொகுப்பிலிருந்து “ தமிழே...தமிழே “ கவிதையை இசை ததும்பப் பாடி அரங்கை மகிழ்வித்தார்.


மீரா ஜெயக்குமார் மாணவர் பார்வையில் கவிதைகளைப் பற்றிக் கருத்துரைத்து அசத்தினார். ஞாலம் பதிப்பக நிறுவநர் பேராசிரியர் ஞால.ரவிச்சந்திரன் நூலாய்வு செய்து பதிப்பாசிரியர் உரையையும் ஆற்றினார். கவிஞர் லலிதா சுந்தர் தமக்கே உரிய வெண்கலக் குரலில் சுவைபட நிகழ்வினை நெறியாளுகை செய்து அரங்கை மீண்டும் அதிர வைத்தார். நிறைவாக நூலாசிரியர் கவிஞர் தியாக ரமேஷ் உணர்வுப் பெருக்கால் அரங்கைத் தம் வசப்படுத்தி அரங்கம் குலுங்கக் கரவொலி பெற்று நன்றியுரை ஆற்றினார்.


கவிஞருக்கு நன்றி செலுத்தும் முகத்தான் அரங்கத்தில் பங்கேற்ற அனைவரும் நூலினைப் பெற்றுச் சென்றமை குறிப்பிடத் தகுந்ததாகும்.


- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்





Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us