/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஆறுபடை வீடு சிறப்பு வழிபாடு
/
சிங்கப்பூர் ஆலயத்தில் ஆறுபடை வீடு சிறப்பு வழிபாடு
அக் 25, 2025

கருணையே வடிவாக சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் எழுந்தருளி அருளாட்சி புரிந்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெரு விழாவை ஒட்டி ஆறு படை வீடு சிறப்பு வழிபாடு 22.10.2025 ஆம் நாள் கோலாகலமாகத் தொடங்கியது. இதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு மண்டபத்தில் ஆறுபடை வீடு முருகப் பெருமான் எழுந்தருளி அருள்பாலித்தமை கண்கொள்ளாக் காட்சியாகும்.
22 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கல மகளிர் வரிசை எடுத்து ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர். 8.45 மணிக்கு ஆறுபடை வீடு சிறப்பு வழிபாடு தொடங்கியது. 9 மணிக்கு திரிசதி அர்ச்சனையும் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்று பக்தப் பெருமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 26 ஆம் தேதி ஸ்ரீ முருகப் பெருமான் அம்பாளிடம் சக்தி வேல் பெறும் நிகழ்ச்சியும் 27 ஆம் தேதி சூர சம்ஹாரமும் 28 ஆம் தேதி ஸ்ரீ முருகப் பெருமான் திருக்கல்யாணமும் நடைபெறும்.
ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர். பக்தப் பெருமக்கள் சூர சம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவத்தையும் காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.
- சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement

