/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
தங்கத்தாரகை மறக்க முடியாத ஒரு மகளிர் நாள்
/
தங்கத்தாரகை மறக்க முடியாத ஒரு மகளிர் நாள்
மார் 16, 2026

அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் தங்கத்தாரகை நிகழ்ச்சி மறக்க முடியாத மகிழ்ச்சியான, மன நிறைவான , களிப்பு, வியப்பு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்தையும் ஒரு சேர அளித்த நிகழ்வாக இருந்தது.
நிகழ்ச்சி அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டின் தலைவர் மருதயாழினி பிரதீபாவின் வரவேற்புரையுடன் தொடங்கி பொருளாளர் சங்கீதா ரமேஷ் மற்றும் தங்கத் தாரகை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பபிதா தமிழ்ச் செல்வன், ஸ்ரீரஞ்சனி சேகர் உரையோடு தொடர்ந்தது.
மீனாட்சி கணேஷ், நிரஞ்சனா ஜெயக்குமார் வழி நடத்தினர்.
போட்டிக்குழுவைச் சார்ந்த கிருத்திகா புனிதராஜ், பிரேமா பாய், ஜீவிதா கிருஷ்ணன் நடத்திய விறுவிறுப்பான திரைப் போட்டிகள் மற்றும் விளையாட்டுகளில் மக்கள் மிகுந்த புத்துணர்ச்சியோடும் மகிழ்ச்சியோடும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.
GATS WOW2026 - K-Town Queens: The Movie Character Ramp Walk போட்டிழில் முதலாம் இடத்தை ராதிகா கார்த்திகேயன், இரண்டாம் இடத்தை லாவண்யா கேதார்நாத், மூன்றாம் இடத்தை திருமிகு ஷாலு கார்த்திக் வென்றனர்.
GATS WOW2026 - The Ethnic Icon: Best Dressed Traditional போட்டியில் முதலாம் இடத்தை லாவண்யா கேதார்நாத், இரண்டாம் இடத்தை ராஜலக்ஷ்மி மனோஜ், மூன்றாம் இடத்தை ஆனந்தலக்ஷ்மி ஸ்ரீராம், நித்ய சேகர் அவர்களும் வென்றனர்.
மூன்றாவது குறுங் காணொளி போட்டியில் முதலாம் இடத்தை அனிதா லட்சுமி வேலாயுதம், இரண்டாம் இடத்தை 90's கலாட்டா குழுவினர், மூன்றாம் இடத்தை ரஜினி சுந்தர்ராஜு பெற்றனர்.
நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியான GATS 2026 பட்டத்தை அனிதா ஷா அவர்கள் வென்றார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே ரம்யா துரை, திவ்யா வினோத் பெற்றனர்.
கண்கவர் குழு நடனங்களும், காதுகளுக்கு விருந்தளிக்கும் இனிமையான குழுப் பாடல்களும் சிறப்பான விளையாட்டுகளும், அட்லாண்டா பறைக்குழு மகளிர் வழங்கிய அசத்தல் பறையாட்டம் மற்றும் பயிற்சி என நிகழ்ச்சி களைகட்டியது. கலை நிகழ்ச்சிகளை கலை மற்றும் பண்பாட்டுக் குழுவினைச் சேர்ந்த ஜெர்லின், அருணா, ஈஸ்வரி, ஷாலினி ஒருங்கிணைத்தனர்.
உறுப்பினர்கள் பலரின் தோழிகள் அனுப்பியிருந்த பாராட்டுக் காணொளிகள் நிகழ்ச்சியின் இடை இடையே ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
WOW GATS 2026 தங்கத்தாரகை DJ ரேகா நெறிப்படுத்திய துள்ளலான இசை அனைவரையும் ஆட்டம் போட வைத்தது.
இப்படி ஒரு நிகழ்ச்சியைச் சுவைக்கும் நேரத்தில், சுவையான உணவைச் சுவைக்காமல் எப்படி? சுவையான சிற்றுண்டி மற்றும் இரவு உணவை 'அன்னபூரணி உணவகம் வழங்கியது. பொருளாளர் சங்கீதா ரமேஷ் நன்றியுரை கூறிய பின்னர் அனைவரும் ஒன்று கூடி, கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். அதன் பின்னர் கண்களை கவரும் விளக்குகள் எரிய அமைக்கப்பட்ட நடன தளத்தில் மகிழ்ச்சியுடன் அனைவரும் நடனமாடி நிகழ்வினை நிறைவு செய்தனர்.
Advertisement

