/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
நியூயார்க் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா
/
நியூயார்க் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா
பிப் 17, 2026

நியூயார்க் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் விழா
நியூயார்க் தமிழ்ச்சங்கம் வெற்றிகரமாக ஐம்பத்தி ஆறாம் ஆண்டை தொடங்கியது. இந்த ஆண்டு புதிய செயற்குழு பொறுப்பேற்றுக்கொண்டது . குமரப்பன் அண்ணாமலை தலைமையின் கீழ் வசந்தகுமார் வெங்கடாசலம் நிர்வாகத் துணைத் தலைவராகவும், கனிமொழி பாஸ்கரன் துணைத் தலைவராகவும், சண்முகவேல் செயலாளராகவும், மரு.பிஞ்சி சீனிவாசன் பொருளாளராகவும், பிரபா பாலா இணை செயலாளராகவும் மற்றும் செல்வ லட்சுமி வெங்கடேசன் இணை பொருளாளராகவும் பொறுப்பேற்றனர். ஜனவரி 31, 2026 சனிக்கிழமை அன்று நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் திருநாள் நடந்தது. 12 மணிக்கு சுவையான மதிய உணவுக்குப் பின் பொங்கல் நிகழ்ச்சி உற்சாகத்துடனும் சிறப்புடனும் தொடங்கியது. குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி கலாச்சாரம், இசை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த ஒரு இனிய மாலை பொழுதினை கழித்தனர்.
இந்த விழாவின் முக்கிய ஈர்ப்பாக பிரபல பாடகர் சத்யன் இசை நிகழ்ச்சி அமைந்தது. அவரின் உயிரோட்டமான பாடல்கள், கலகலப்பான உரையாடல்கள் மற்றும் பார்வையாளர்களுடன் கொண்ட உற்சாகமான தொடர்பு, அரங்கத்தை மகிழ்ச்சியால் நிறைத்தது. பார்வையாளர்கள் பாடல்களுடன் இணைந்து கைதட்டியும், ஆடியும் கொண்டாடினர்.
மேலும், உள்ளூர் கலைஞர்கள் தங்களது திறமைகளை இசை, நடனம் மற்றும் பாடல் மூலம் மேடையில் வெளிப்படுத்தினர். ஒவ்வொரு நிகழ்ச்சியும் பாரம்பரியத்தின் அழகையும் சமூகத்தின் படைப்பாற்றலையும் பிரதிபலித்து பார்வையாளர்களின் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
செவிக்கு உணவாக இசை நிகழ்ச்சி இருந்தது போல் வயிற்றுக்கு பாரம்பரிய சுவைகள் நிறைந்த விருந்துடன் இரவுணவும் வழங்கப்பட்டது.இந்த விழாவிற்கு தாராளமான ஆதரவு வழங்கிய எங்கள் Title Sponsors அனைவருக்கும் நியூயார்க் தமிழ்ச் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்:டாக்டர் எம். என். கிருஷ்ணன் / டாக்டர் சசிகலா கிருஷ்ணன் குடும்பம்காஞ்சனா பூலா / ஜெகதீசன் (ஜாக்) பூலா குடும்பம்முனைவர் பாலா சுவாமிநாதன் / பிரபா பாலா குடும்பம்
இந்நிகழ்ச்சி புதிய நியூயார்க் தமிழ்ச் சங்கம் நிர்வாகக் குழுவினரால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு, சமூக அலுவலகப் பொறுப்பாளர்களின் முழுமையான ஆதரவுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
Advertisement

