sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

அமெரிக்கா

/

செய்திகள்

/

“சாதனையைக் கேட்க முழங்கிய சிலம்பின் ஒலி—ரோபாட்டிக்ஸில் இன்று வெற்றி!”

/

“சாதனையைக் கேட்க முழங்கிய சிலம்பின் ஒலி—ரோபாட்டிக்ஸில் இன்று வெற்றி!”

“சாதனையைக் கேட்க முழங்கிய சிலம்பின் ஒலி—ரோபாட்டிக்ஸில் இன்று வெற்றி!”

“சாதனையைக் கேட்க முழங்கிய சிலம்பின் ஒலி—ரோபாட்டிக்ஸில் இன்று வெற்றி!”


நவ 17, 2025

Google News

நவ 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிலம்பு Robotics அணி - வடஅமெரிக்காவின் தமிழ் சமூகத்தில் முதல்முறையாக FLL & FTC போட்டிகளில் தமிழ் மாணாக்கர்கள் ஓரணியில் திரண்டு பங்கேற்று அசத்தியது.

அடுத்த தலைமுறையைப் பார் போற்றும் தலைவர்களாக உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படும் சிலம்பு செந்தமிழ் அவை (மிச்சிகன், வட அமெரிக்கா) - இந்த ஆண்டில் முதல் முறையாக


FLL (First Lego League) மற்றும் FTC (First Tech Challenge) Robotics அணிகளைத் தொடங்கி,

நம் இளம் கண்டுபிடிப்பாளர்களை உலகத் தர புத்தாக்க உலகத்துக்கு கொண்டு சென்றுள்ளது.


வட அமெரிக்காவில் நடக்கும் FIRST Robotics போட்டியில், SILAMBU Robotics Team 'Best Performance Bot' விருதை வென்று தமிழர் சமூகத்திற்கு பெருமை சேர்த்தது.

இந்த வெற்றி சிலம்புவின் வெற்றியே அல்ல…


அனைத்து தமிழர்களின் வெற்றி.

மெய்சிலிர்க்க வைத்த தருணங்கள்


போட்டியின் போது, அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் “Silambu! Silambu!” என்று உற்சாகமாகக் கூவியபோது, நம் வீரச் சிலம்பின் பெயர் உலக மேடையில் ஒலித்த தருணம் தமிழர்களுக்கு மறக்க முடியாத பெருமையை ஏற்படுத்தியது.

பல பெற்றோர்கள் தனித்தனியாக வந்து, “நீங்க தமிழா?” என்று கேட்டபோது மாணவர்கள் “ஆமாம் - நாங்க தமிழ்தான்!” என்று பெருமையோடு பதிலளித்தனர். இந்தக் குரல் வெற்றி மேடையிலும் ஒலித்தது.


இந்த வெற்றியின் முதுகெலும்பாக இருந்த SILAMBU Robotics குழுத் தலைவர் Maheshkumarக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

எங்கள் பெரும் நன்றிகள்: Panasonic, Bosch, Magna, Broadino, Eastern Michigan University, Storm Taekwando, GM, Ford, Digital Cube, Meat Point மற்றும் அயராது உழைத்த பெற்றோர் அனைவருக்கும்.


சிலம்பின் நோக்கம்

SILAMBU : From the Community, For the Community, By the Community (தமிழ் மக்களிடம் இருந்து, தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்களால் உருவானதே சிலம்பு)


அமெரிக்கா - டெட்ராய்ட் பெருநகரப் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தமிழர் சமூகத்திற்காக கல்வி, தொழில்நுட்பம், மன-உள ஆரோக்கியம், & அடுத்த தலைமுறையின் முன்னேற்றம் என்ற நிலைப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ் சங்கங்களுக்கு அழைப்பு


உங்கள் தமிழ் சங்கத்திலும் FLL / FTC Robotics அணிகளை தொடங்க விருப்பம் இருந்தால், சிலம்பு உதவத் தயாராக உள்ளது.

சமூக வளர்ச்சிக்கான பயணத்தில் ஒன்றிணைவோம்.


- சான்ஆன்டோனியோவிலிருந்து நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us