
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலகின் பல்வகை இசைக்கருவிகளின் அணிவிழா!
மத்தளங்கள் உருளைகள் கைமுரசு என அணிகளா!
சரக்கருவிகள் ஒலிக்க இசைசரமென பாடலா!
இணைந்து இசைத்தது சின்சிவேங்கை உருவி(லா)ழா!
இந்தியத் தோலிசைக் கருவிகளின் தாயென பறை சாற்றியது பறை ஒலியிலா!
உரைத்தனர் தமிழர் பெருமையை!
ஒலித்தனர் வான்முழங்கும் பறைதனை!
ஆங்கில இசையைத் தமிழில் மொழிந்தனர்!
பறை இசையுடன் ஆட்டமென மகிழ்த்தினர்!
ஆர்ப்பரித்த கூட்டம் களிப்பில் உரைந்தனர்!
மொத்தத்தில் தமிழ் தமிழ் தமிழென வாழ்ந்தனர்! -நாகராஜன் ராஜேந்திரன்
- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்
https://youtu.be/jczfiEAOJFo?si=YRMpPB9mQC0tLDfi
Advertisement