உள்ளூர் செய்திகள்

திருப்பம் தரும் சோமேஸ்வரர்

பெங்களூரு அருகிலுள்ள ஹலசூரு சோமேஸ்வரரை தரிசித்தால் திருப்பம் உண்டாகும். இக்கோயிலில் சோமேஸ்வரரும், காமாட்சியம்மனும் மூலவர்களாக உள்ளனர். ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் இங்குள்ளது. பால விநாயகர், பீமலிங்கேஸ்வரர், பிரதோஷ நந்தி, 64 துாண்கள் கொண்ட மண்டபம், பிருகு நந்தி, கயிலையை துாக்கும் ராவணன், மாண்டவ்ய மகரிஷி, உற்ஸவர் சன்னதிகளைத் தரிசித்து விட்டு ஆறுபடிகள் ஏறினால் சோமேஸ்வரர் சன்னதியை தரிசிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் நாயன்மார்கள், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர், நாகதேவதை, வள்ளி தெய்வானையுடன் முருகன், பிரம்மா, சரஸ்வதி சன்னதிகள் உள்ளன. கவலை, துக்கத்தை ஜேஷ்டா தேவியிடம் சொல்லி வழிபட்டால் அவள் துக்க நிவாரணியான துர்கையிடம் சிபாரிசு செய்வதால் இருவரும் நேர் எதிரில் உள்ளனர். சுவாமி சன்னதிக்கு இடதுபுறத்தில் காமாட்சியம்மன் கிழக்கு நோக்கியபடி இருக்கிறாள். தலவிருட்சமாக பன்னிரு இலைகளைக் கொண்ட துவாதச வில்வமரம் உள்ளது. ஒரே சன்னதியில் வீர ஆஞ்சநேயர், அபய ஆஞ்சநேயர் உள்ளனர். அஸ்வத்தம் எனப்படும் அரசமரத்தின் அடியில் நாகர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. சோமேஸ்வரா கல்யாணி என்னும் தீர்த்தம் உள்ளது.எப்படி செல்வது:* ஓசூருவில் இருந்து மடிவாலா 35 கி.மீ., அங்கிருந்து 14 கி.மீ.,* பெங்களூருவில் இருந்து ஹலசூரு 5 கி.மீ.,விசேஷ நாள்: சித்ராபவுர்ணமி தேர், நவராத்திரி, மகாசிவராத்திரி.நேரம்: காலை 6:00 - 12:30 மணி; மாலை 5:30 - 9:30 மணிதொடர்புக்கு: 94480 24793அருகிலுள்ள தலம்: ஹலசூரு முருகன் கோயில்(அரை கி.மீ.,) (திருமணத்தடை நீங்கும்)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 5:00 - 9:00 மணிதொடர்புக்கு: 99453 50580, 94486 75001