ராஜயோகம் தரும் நாகநாத சுவாமி
காலசர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷத்தால் சிரமப்படுபவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகிலுள்ள பேரையூர் நாகநாதசுவாமியை தோஷம் விலகுவதற்கு ராகு காலத்தில் தரிசியுங்கள். இக்கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதிக்கு இடையே சண்முகர் சன்னதி இருப்பதால் இதனை 'சோமாஸ்கந்தர் கோயில்' என்கின்றனர். அம்மனின் திருநாமம் பிரகதாம்பாள். நவக்கிரக சன்னதியில் எல்லா கிரகங்களும் சூரியனை பார்க்கும் விதத்தில் உள்ளன. இக்கோயில் எங்கும் பக்தர்கள் காணிக்கையாக அளித்த நாகர் சிலைகள் உள்ளன. விநாயகர், விஸ்வநாதர், நடராஜர், துர்கை, பைரவர் சன்னதிகள் உள்ளன. கோயில் முன்பு சிவகங்கை தீர்த்தமும், கோயிலுக்கு உள்ளே புண்ணிய புஷ்கரணி சுனையும் உள்ளன. சீதையை தேடிச் சென்ற ராமர் இங்கு வழிபட்டு போரில் வெற்றி பெற்றார். மன்னர் சுவேதகேது கங்கையில் நீராடிய போது கங்கையம்மன் காட்சியளித்தாள். ''தாயே! தென்னகத்திற்கு எழுந்தருளி எங்களுக்கும் வாழ்வளிக்க வேண்டும்'' என மன்னர் வேண்டினார். கங்கையும் சிறுமியாக உருமாறி மன்னருடன் வந்தாள். ஆனால் வழியில் காவிரி நதியைக் கண்டதும் அதனுடன் இரண்டறக் கலந்தாள். வருந்திய மன்னர் இங்கு அருள்புரியும் நாகநாத சுவாமியிடம் முறையிடவே, ஊருக்கு வடக்கே சுவேத நதியை ஓடச் செய்தார். சுவாமியின் அருளால் ஞானியாக மாறிய திருடன் ஒருவன், சாம்பிராணி இட்டு வழிபட்டதால் இங்கு சாம்பிராணி வழிபாடு சிறப்பாக நடக்கிறது. எப்படி செல்வது: புதுக்கோட்டை - திருப்புத்துார் சாலையில் நமுணா சமுத்திரத்தில் இருந்து 2 கி.மீ.,விசேஷ நாள்: ராகுகாலம், ஆடிப்பூரம், தைப்பூசம், பங்குனி உற்ஸவம்.நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 98947 30410அருகிலுள்ள தலம்: புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில் 13 கி.மீ., (வாக்கு நிறைவேற...)நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 04322 - 236 165