பயம் போக்குபவள்
பக்தர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றும் நிமிஷாம்பாள், கர்நாடக மாநிலம் கஞ்சாம் என்னும் இடத்தில் குடியிருக்கிறாள். இவளை நினைத்தாலே பயம் போய் விடும். மன்னர் முக்தராஜன் இப்பகுதியை ஆண்ட காலத்தில் அசுரன் சுமண்டலன் இடையூறு செய்தான். பராசக்தியை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார் மன்னர். அதற்கு இணங்கி பராசக்தி அவனை சாம்பல் ஆக்கினாள். அருள் செய்த அம்மனுக்கு 'நிமிஷாம்பாள்' என பெயர் சூட்டி கோயில் கட்டினார். ' உடனடியாக வரம் தருபவள்' என்பது இதன் பொருள். வைகாசி வளர்பிறை தசமியன்று நடக்கும் ஜெயந்தி விழாவில் 108 கலசாபிஷேகம், துர்கா ஹோமம் நடக்கிறது. 'கிருஷ்ண சிலா' என்னும் கருமை நிறக் கல்லால் ஆன அம்மனின் கையில் சூலம், உடுக்கை உள்ளது. கிழக்கு நோக்கிய இவளின் தலை மீது தர்மச் சக்கரம் குடையாகவும், ஸ்ரீசக்கரம் அம்மனின் பாதத்திலும் உள்ளது. எதிரி தொல்லை விலகவும், வழக்கில் வெற்றி பெறவும் பவுர்ணமியன்று விரதமிருந்து தரிசிக்கின்றனர். துர்கையின் அம்சமாக நிமிஷாம்பாள் இருப்பதால் ராகுகாலம், அஷ்டமியன்று பால் அபிஷேகம் நடக்கிறது. கோயிலுக்கு அருகிலுள்ள காவிரி நதியில் விநாயகர் சன்னதி உள்ளது. விநாயகர், சிவன், பார்வதி, சூரியன், விஷ்ணு ஆகியோரை இணைத்து சனாதன தர்மத்தை ஆதிசங்கரர் ஏற்படுத்தினார். அதனடிப்படையில் ஐந்து சன்னதிகள் இங்குள்ளன. எல்லா சன்னதியிலும் தீர்த்தம் தரப்படுகிறது. எப்படி செல்வது: மைசூருவில் இருந்து 18 கி.மீ., துாரத்தில் கஞ்சாம்விசேஷ நாள் : நிமிஷாம்பாள் ஜெயந்தி, மாத பவுர்ணமி, நவராத்திரி.நேரம்: காலை 6:00 - இரவு 8:30 மணிதொடர்புக்கு: 98458 01632, 08236 - 252 640 அருகிலுள்ள கோயில்: மைசூரு சாமுண்டீஸ்வரி 12 கி.மீ., (எதிரிபயம் தீர...)நேரம்: காலை 6:00 - 2:00 மணி; மதியம் 3:00 - 9:00 மணிதொடர்புக்கு: 99646 76625