கண்ணா... கண்ணா...
UPDATED : பிப் 13, 2025 | ADDED : பிப் 13, 2025
பதகம் முதலை வாய்ப் பட்ட களிறுகதறிக் கைகூப்பி, 'என் கண்ணா! கண்ணா!' என்னஉதவப் புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.முதலையின் வாயில் அகப்பட்டது கஜேந்திரன் என்னும் யானை. அது தன் துதிக்கையைத் துாக்கி 'ஆதிமூலமாகிய என் கண்ணா! அருள்புரிய வருவாய்' என கதறி அழைத்தது. அப்போது கருடனின் மீதேறி ஓடோடி வந்தான். அப்படிப்பட்ட கருணை மிக்க கண்ணன் பூச்சி காட்டுகிறான். ஐயோ... பூச்சி காட்டி பயமுறுத்துகிறான் என்கிறார் பெரியாழ்வார். பூச்சி காட்டுவது என்பது குழந்தைகள் தாடி, மீசை வைத்துக் கொண்டு பெரியவர்களை பயமுறுத்தி விளையாடும் விளையாட்டு.