உள்ளூர் செய்திகள்

ஆண்கள் சுற்றலாமா...

அரசமரம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் சொல்வதைக் கேளுங்கள். இந்த மரத்தின் தெற்கு பக்க கிளையில் சிவன், மேற்கு கிளையில் மகாவிஷ்ணு. வடக்கில் பிரம்மாவும், கிழக்கில் தேவர்களும் தங்கியுள்ளனர். அதனால் அரசமரத்தை சுற்றி வந்தால் மும்மூர்த்திகளை தரிசித்த பலன் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டி பெண்கள் அரசமரத்தை வலம் வருவர். பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் பகலில் சுற்றலாம். சூரியன் மறைந்த பின்னர் இந்த மரத்தை சுற்றக்கூடாது. அரசமர வழிபாட்டிற்கு திங்கள், சனிக்கிழமை ஏற்றது.