உள்ளூர் செய்திகள்

காமேஸ்வரா...

காமம் என்னும் சிற்றின்பம் குறித்து காஞ்சி மஹாபெரியவர் சொல்வதைக் கேளுங்கள். உடல் உருவாக காமத்தை கருவியாக வைத்தார் கடவுள். ஏனெனில் மண்ணில் உடலெடுத்து பிறந்தால் மட்டுமே உயிர்களால் மோட்சத்தை அடைய முடியும். ஆனால் அங்கு யாரும் செல்வதாக தெரியவில்லை. ஏனெனில் உயிர்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவதே காரணம்.மரத்தில் பழங்கள் நிறைய வந்தாலும், அதன் ஏதோ ஒரு பழத்தின் விதையே மீண்டும் மரமாகும் நிலையை அடைகிறது. மற்றவை வீணாகி விடும். அது போல மண்ணில் தோன்றும் உயிர்களில் ஏதோ சில மட்டுமே பாவம் செய்யாமல் பூரணநிலை அடைகின்றன. அந்த உயிரையே 'மகான்' எனக் கொண்டாடுவர். அப்படி மகான் பிறப்பதற்கும் மூலகாரணம் காமம் தான். இதனடிப்படையில் 'காமேஸ்வரன்' என சிவனையும், 'காமகலா' என அம்பிகையையும் அழைக்கிறோம்.