உள்ளூர் செய்திகள்

எங்கள் தலைவன்

மின்னிடைச் செந்துவர் வாய் கருங்கண்வெண்ணகை பண்ணமர் மென்மொழியீர்!என்னுடை ஆரமுது எங்கள் அப்பன்எம்பெருமான் இமவான் மகட்குத்தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன்தமையன் எம் ஐயன் தாள்கள் பாடிப்பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்!பொன் திருச் சுண்ணம் இடித்து நாமே!மின்னலைப் போன்ற இடையும், செம்பவளம் போல் சிவந்த இதழும், கரிய அழகான கண்களும் கொண்ட பெண்களே... வெண்ணிற பற்கள் தெரிய புன்னகை சிந்துபவர்களே. இசை போல இனிமையாக பேசுபவர்களே. பொன் ஆபரணங்கள் அணிந்தவர்களே.அமிர்தம் போல இனிக்கும் சிவபெருமானே எங்களுக்கு தந்தையும், தலைவனுமாக இருக்கிறான். மலையரசன் மகளான பார்வதிக்கு கணவனான அவன், எங்களின் மகனாகவும், தந்தையாகவும், சகோதரனாகவும் இருக்கிறான். அப்பெருமானின் திருவடிகளைப் பாடியபடி அவனது அபிஷேகத்திற்குரிய வாசனைப்பொடியை இடிப்போம் வாருங்கள் என அழைக்கிறார் மாணிக்கவாசகர்.