மும்மூர்த்தி முருகன்
UPDATED : மே 17, 2024 | ADDED : மே 17, 2024
சிவனின் அம்சமாக அவதரித்தவர் முருகப்பெருமான். ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை தந்தையான சிவனுக்கு உபதேசித்தவர். அந்த மந்திரத்தின் பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்தவர். சூரனை வதம் செய்து மகாவிஷ்ணுவின் மகளை திருமணம் செய்தவர். இப்படி சிவன், பிரம்மா, விஷ்ணுவுடன் தொடர்புள்ள முருகன் மும்மூர்த்திகளின் அம்சமாக இருக்கிறார். முருகா என்னும் சொல்லில் உள்ள எழுத்துக்களான மு - முகுந்தனையும் (மகாவிஷ்ணு), ரு - ருத்ரனையும்(சிவன்), கா - கமலனையும்(பிரம்மா) குறிக்கிறது. முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளை கும்பிட்ட பலன் கிடைக்கும்.