அம்மனின் இடுப்பில் குழந்தை
UPDATED : ஜூலை 14, 2016 | ADDED : ஜூலை 14, 2016
தென்மாவட்டங்களில் இடுப்பில் குழந்தையுடன் உள்ள அம்மனை இசக்கியம்மன் என அழைப்பார்கள். குழந்தைகளைப் பாதுகாக்கும் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். புதன் தலமான திருவெண்காட்டில் இவளை இடுக்கியம்மன் என்கிறார்கள். இத்தலத்திற்கு வந்த ஞானசம்பந்தர் இவ்வூரில் சிவலிங்கங்கள் புதைந்து கிடப்பதை அறிந்து கோவிலுக்கு நடந்து செல்லத் தயங்கினார். எனவே, ஊர் எல்லையில் இருந்த காவல் தெய்வமான அம்மன், சம்பந்தரை இடுப்பில் வைத்துக் கொண்டு கோவிலுக்குத் தூக்கிச் சென்றாள். எனவே, இடுக்கியம்மன் என அழைக்கப்பட்டாள். இந்த கோவில் இன்றும் ஊர் எல்லையில் இருக்கிறது.