நடனம் தாண்டவமான கதை
UPDATED : ஜூலை 10, 2016 | ADDED : ஜூலை 10, 2016
தண்டு என்ற மகரிஷி, நடனம் கற்க ஆசைப்பட்டார். இதற்காக சிவனை வேண்டி தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த சிவன், நடராஜராக நாட்டிய தரிசனம் காட்டி அருளினார். அவருக்கு நாட்டிய முறைகளையும் கற்றுக் கொடுத்தார். அப்போது தண்டு மகரிஷி, சிவனின் நடனங்கள் அனைத்தும் தனது பெயரில் அழைக்கப்பட அருளும்படி வேண்டினார். சிவனும் அவ்வாறே அருள் புரிந்தார். எனவேதான், சிவ நடனத்துக்கு 'தாண்டவம்' என்ற பெயர் ஏற்பட்டது.