ஓணம் வந்தல்லோ...
UPDATED : ஆக 29, 2020 | ADDED : ஆக 29, 2020
மகாபலியின் செருக்கை அடக்க வாமனராக அவதரித்தார் மகாவிஷ்ணு. யாகம் நடத்திய மகாபலியிடம் வந்த வாமனர், மூன்றடி மண் தானம் கேட்க அவரும் சம்மதித்தார். முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து பாதாள உலகிற்கு அனுப்பினார். அப்போது தன் நாட்டு மக்களைக் காண ஆண்டு தோறும் வருவதற்கு மகாபலி அனுமதி கேட்க வாமனரும் ஏற்றார். இதனடிப்படையில் மக்களை காணவரும் மகாபலியை வரவேற்கும் நாளாக ஓணம் கொண்டாடப்படுகிறது.