உள்ளூர் செய்திகள்

புருலியா நடனம்

மேற்கு வங்கம் புருலியா மாவட்டத்தில் வாழும் பூமிஜ் பழங்குடி மக்கள் கார்த்திகேய சுவாமியை விவசாயம் செழிக்க வழிபடுகின்றனர். தாரகாசுரனிடம் இருந்து தேவர்களைக் காப்பாற்றிய வீரன் கார்த்திகேயன் என்றும், கந்தனின் தாயான பார்வதியை 'ஸ்கந்த மாதா' என்றும் அழைக்கின்றனர்.பார்வதிக்கு மாமிசமும், அவரது மகனான கார்த்திகேயனுக்கு சைவ உணவும் படைக்கின்றனர். புகழ் பெற்ற 'புருலியா சாவ்' நடனத்தை இவர்கள் ஆடுகின்றனர்.