உள்ளூர் செய்திகள்

நன்றாக படிக்கணுமா?

சில குழந்தைகளுக்கு என்னதான் முயற்சி எடுத்தாலும் அறவே படிப்பு வருவதில்லை. இந்த குழந்தைகளின் பெற்றோர் அருகிலுள்ள அம்மன் கோவில்களில் வெண்பொங்கலிட்டு அதில் பச்சை வெண்டைக்காயை நறுக்கி புதைத்து, ஒன்றிரண்டு துண்டுகளைச் சாப்பிட வைக்க வேண்டும். இதனால் ஞாபகசக்தியும், ஞானசக்தியும் கூடும் என்பது நம்பிக்கை. கும்பகோணம் அருகிலுள்ள கதிராமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள ஞான பிரஸ்னாம்பிகைக்கு இவ்வாறு பொங்கல் வைக்கும் வழக்கம் உள்ளது. இந்த ஊரில் தான் புகழ்பெற்ற வனதுர்க்கை அம்மன் கோவில் இருக்கிறது.