தாலிபாக்கியம் நிலைக்க!
UPDATED : ஜூலை 14, 2016 | ADDED : ஜூலை 14, 2016
திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள அம்பாளை பெண்ணின் நல்லாள் அம்மை என்று அழைப்பர். திரிபுர சுந்தரி என்றும் பெயருண்டு. பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த அம்மனை தரிசிக்க வேண்டும். இதன் காரணமாக தாலி பாக்கியம் நிலைக்கும். திருமணம் ஆகாத பெண்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்பது ஐதீகம்.