உள்ளூர் செய்திகள்

வீண் கேள்வியைத் தவிருங்கள்

* உன் ஜீவன் ஆத்திரம் கொள்வதில் வேகமாய் இராது. ஏனெனில் சினம் என்பது மூடர்களின் இருதயத்தில் தங்கியிருக்கிறது.* அவனுடைய கை ஒவ்வொருவனுக்கும் எதிராக இருக்கும். ஒவ்வொருவனின் கையும் அவனுக்கு எதிராக இருக்கும்.* அசட்டுத்தனமான வீண் கேள்விகளைத் தவிர்த்துவிடு. அவை சச்சரவுகளையே பிறப்பிக்கின்றன.* தரித்திரன் கெஞ்சுதலையே உபயோகிக்கிறான். பணக்காரனோ முரட்டுத்தனமாகப் பதிலுரைக்கிறான்.* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால் வயதான பிறகு அந்த வழியிலிருந்து விலகாமலிருப்பான்.* துன்மார்க்கனின் தொண்டை திறக்கப்பட்டிருக்கும் பிரேதக்குழி.* உடல் சதைக்குரிய சிந்தனையோ மரணம் ஆகும். ஞானத்துக்குரிய சிந்தனையோ வாழ்வும் அமைதியும் ஆகும்.* கடவுளின் ஜீவன் எங்கிருக்கிறதோ அங்கு சுதந்திரமுண்டு.* வேஷதாரியே! முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை விட்டெறி. பிறகு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்தெறியத் தெளிவாய் பார்க்கலாம். -பைபிள் பொன்மொழிகள்