உள்ளூர் செய்திகள்

பாவத்தின் மீது கோபப்படுங்கள்

* சஞ்சலமுள்ளவன் காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்து அலைக்கழிக்கப்படும் கடல் அலைபோல் இருக்கிறான்.* நியாயப் பிரமாணத்தைக் கிரமப்படி மனிதன் உபயோகித்தால் நியாயப் பிரமாணம் நல்லது.* சச்சரவிலிருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மை. ஆனால், ஒவ்வொரு முட்டாளும் எந்தச் சண்டையிலும் தலையிட்டுக் கொண்டேயிருப்பான்.* சகிப்புத் தன்மையுள்ளவர்களே சந்தோஷமாயிருக்கிறார்கள் என்று மதிக்கிறோம்.* ஒரு சிறு குழந்தையைப் போலக் கடவுளின் ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாத எவனும் அதனுள் நுழைய மாட்டான்.*பொறாமையும் சச்சரவும் எங்கிருக்கிறதோ, அங்கே குழப்பமும் சகலவிதத் தீச்செயல்களும் இருக்கின்றன.* அறிவாளிகளோடு நடப்பவன் அறிவாளி ஆவான். முட்டாள்களின் தோழனோ அழிந்துபோவான்.* பாலைக் கடைந்தால் வெண்ணெய் பிறக்கும். மூக்கைப் பிசைந்தால் ரத்தம் பிறக்கும். கோபத்தை வலியுறுத்தினால் சண்டை தான் பிறக்கும்.* பாவம் செய்யாமல் கோபப்படுங்கள். உங்கள் கோபத்தின் மீது சூரியன் கீழே இறங்கி விடாதிருக்கட்டும்.-பைபிள் பொன்மொழிகள்