உள்ளூர் செய்திகள்

ஒருவரை ஒருவர் தாங்குங்கள்

* ஆண்டவர் நன்மையும் செய்யார்; தீமையும் செய்யார் என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டு பஞ்சணையில் சாய்ந்து படுத்திருப்போரைத் தண்டிப்பேன்.* அமைதிக்கு வழிவகுப்பவற்றை நாடுவோமாக! ஒருவர் மற்றொருவருக்கு வளர்ச்சி தருபவற்றைச் செய்ய முயலுவோமாக.* சினமுற்றாலும் பாவத்தைச் செய்யாதிருங்கள். படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள்.* தீயவரின் கூடாரத்தில் ஒளி இருளாகும். அவர்கள் மீது ஒளிரும் விளக்கு அணைந்து போகும். ஒளியிலிருக்கும் தீயவர்கள் இருளுக்கு தள்ளப்படுவது உறுதி. * பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.* முழுமனத்தாழ்மையோடும், கனிவோடும், பொறுமையோடும் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்குங்கள். * எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார். அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார்.-பைபிள் பொன்மொழிகள்