வாக்குவாதம் வேண்டாமே!
UPDATED : அக் 04, 2010 | ADDED : அக் 04, 2010
* வாக்குறுதி கொடுத்து, அதைக் கொண்டுசெலுத்தாமல் இருப்பதை விட, வாக்குறுதி செய்யாமல் இருப்பதே சிறந்தது.* சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம். நேர்மையானவனின் வழியோ சுத்தமான ராஜபாட்டை.* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோவென்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறான்.* குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியில் தான் விழுவார்கள்.* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானத்தைவிட, நியாயமாகச் சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.* மனிதனின் இருதயம் அவனுடைய வழியை வகுக்கும். ஆனால், அவனது காலடிகளை வழிநடத்துபவர் கடவுளே.* வாக்குவாதம் செய்ய வேண்டாம். அதனால் கேட்கிறவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய ஒரு பலனுமில்லை.* உற்சாகத்துடன் கர்த்தருக்குப் பணிபுரியுங்கள். பாடிக் கொண்டே அவர் சன்னதிக்கு வாருங்கள். பைபிள் பொன்மொழிகள்