உள்ளூர் செய்திகள்

பணத்தில் பற்று வைக்காதே!

* ஒடுக்கி அடக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். கஷ்ட காலத்திலும் அவரே நமக்கு உதவுகிறார்.* அடக்கு முறையில் நம்பிக்கை வேண்டாம். கொள்ளையடித்து வீணாகிப்போக வேண்டாம். உன்னிடம் பணம் பெருகுமானால் அதன் மீது உனது இதயத்தை வைத்து விடாதே.* அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு அழிந்து நாசமாகிவிடும், நேர்மையானவர்கள் பெரிய துன்பங்களில்இருந்தும் விடுவிக்கப்படுவர்.* பலசாலியைவிட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களை கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.* வெளியிலிருந்து மனிதனுக்குள் போகிற எந்த பொருளும் அசுத்தப்படுத்தாது.* தெய்வ நிந்தனை, அகங்காரம், மூடத்தனத்தின் கூட்டமைப்பாக மனிதன் இருக்கிறான்.* கோபம் வந்தால் அதன் பின்னேயே அவமானமும் வந்து சேரும்.-பைபிள் பொன்மொழிகள்