எல்லாம் கடவுள் அருள்
* அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும், அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.* நாம் கடவுளின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதினால் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நமது பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது.* இப்போது நான் இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால் தான். அவர் எனக்களித்த அருள் வீணாகிவிடவில்லை.* குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது. ஆனால், பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது.* கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார். * நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.- பைபிள்