பகைவனுக்கும் உணவிடுங்கள்
* உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன்? வயல்வெளியிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளர்கின்றன என்று கருதி பாருங்கள். அவை உழைப்பதுமில்லை. நூற்பதுமில்லை.* நேர்மையாளனைக் கடவுள் பரிசோதிக்கிறார். ஆனால், துன்மார்க்கனையும் மூர்க்கத்தனத்தில் மோகமுள்ளவனையுமே அவருடைய உள்ளம் வெறுக்கிறது.* நேர்மையாளனுக்கு வெளிச்சமும், செம்மையாக நிமிர்ந்த நெஞ்சினருக்காக உற்சாகமும் விதைக்கப்பட்டிருக்கின்றன.* வெளிச்சத்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தன் சகோதரனைப் பகைக்கிறவன் இன்னும் இருளிலேயே இருக்கின்றவன் தான். * நேசத்தில் பயம் என்பதே இல்லை. பரிபூரணமான நேசம் பயத்தைப் புறம்பாக்கி விடுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் நேசத்துக்குப் பூரணமானவல்ல. * உன் பகைவன் பசித்திருந்தால் உணவிடு. அவன் தாகத்தோடிருந்தால் பானம் கொடு. இவ்வாறு செய்வதினால் அவன் தலைமீது நெருப்புத்தணலைக் குவிப்பவனாவாய்.- பைபிள் பொன்மொழிகள்