உள்ளூர் செய்திகள்

எழுபது முறை மன்னியுங்கள்!

* (தண்டிக்கும்) சக்தி பெற்ற நிலையிலும் மன்னிப்பவரே இறைவனிடத்தில் கண்ணியத்திற்குரியவர். (நூல்:பைஹகி)* இவ்வுலகிலும் மறு உலகிலும் உள்ள மனிதர்களின் மிகச் சிறந்த பண்புகள் இவையே: உறவை முறிப்பவர்களுடன் உறவைத் தொடர்தல், ஏமாற்றுபவர்களுக்கு உதவுதல், அநீதி இழைப்பவர்களை மன்னித்தல். (நூல்: பைஹகி)* ஒரு நாளைக்கு எழுபது முறை பணியாட்களை மன்னியுங்கள்.* இறைவன் கூறுகின்றான்: நீங்கள் அவர்களுடைய (மனைவி, பிள்ளைகள்) செயல்களைச் சகித்துப் புறக்கணித்து விடுவீர்களானால், மேலும், அவர்களை மன்னிப்பீர்களானால் திண்ணமாக இறைவன் பெரும் மன்னிப்பாளனாகவும், கருணைமிக்கவனாகவும் இருக்கின்றான்.  (திருக்குர்ஆன்64:14)* (தவறு செய்பவர்களை) மன்னித்துவிட வேண்டும். பொறுத்துக் கொள்ளவும் வேண்டும். இறைவன் உங்களை மன்னிக்க வேண்டுமென விரும்புவதில்லையா என்ன?  (திருக்குர்ஆன்24:22)(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)