உள்ளூர் செய்திகள்

நட்பு மிகவும் ஆழமானது

* உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய்.* பாவ ஆசைகளால் ஏராளமானோர் தங்கள் இலக்குகளை மறந்து திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் ஆண்டவரின் அன்பைத்தவிர, வேறு எந்த இலக்கையும் அடைவது நமது நோக்கமாக இருக்க கூடாது, அவரது அன்பைப் பெற அவர் சொன்ன பாதையில் நாம் நடக்க வேண்டும்.* ஒருவன் தன் சிநேகிதனுக்காக தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும், அதிகமான அன்பு ஒருவரிடத்திலும் இல்லை.* ஒருவன் என்னிடத்தில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான். அவனில் என் பிதா அன்பாயிருப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம்.* ஜெபம் பண்ணும் போது, எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்.- பைபிள்