சக்தியும் அன்பும் தந்தவர்
UPDATED : அக் 24, 2012 | ADDED : அக் 24, 2012
* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிட வேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்து விட வேண்டாம்.* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்குக் கடவுளே அடைக்கலமானவர். சங்கட வேளைகளிலும் அவரே அடைக்கலமானவர்.* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், மன அமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.* அயலவனை அவமதிப்பவன் பாபம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.* அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.* நீ பரிபக்குவமான மனிதனையும் நேர்மையாளனையும் கவனித்துப்பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.- பைபிள் பொன்மொழிகள்