எல்லோருக்கும் தந்தை இறைவன்
UPDATED : அக் 01, 2012 | ADDED : அக் 01, 2012
* உங்கள் உயிர் பிழைக்க எதை உண்போம் என்றும், உங்கள் உடலை மூட எதை உடுத்திக் கொள்வோம் என்றும் ஏக்கமாய் இருக்கிறீர்கள். உணவை விட உயிரும், உடையை விட உடலும் மேன்மையானதல்லவா?* சிறு குழந்தைபோல் எவர் தன்னைப் பணிவாகத் தாழ்த்திக் கொள்கிறாரோ, அவரே பரலோகத்தில் தலைசிறந்தவராய் இருப்பார்.* கவலைப்படுவதன் மூலம் உங்களில் ஒருவராவது ஒரு முழமேனும் உயர்ந்து விட முடியுமா?* கடவுள் தீயவர் மீதும் நல்லவர் மீதும் கதிரவன் தன் கதிர்களைப் பெய்யும்படிச் செய்கின்றார். நியாயமானவர்கள் மீதும் நியாயமற்றவர்கள் மீதும் மழை பொழியச் செய்கின்றார்.* மெழுகுவர்த்தியை மரக்காலுக்கடியில் வைப்பது இல்லை. அனைவர்க்கும் ஒளிதரும் வண்ணம் விளக்குத் தண்டின் மேல்தான் வைப்பார்கள்.* இறைவன் நீங்கள் கேட்குமுன்பே உங்களுக்கு எவை தேவை என்பதை தந்தை ஸ்தானத்திலிருந்து அவன் அறிவான்.- இயேசுநாதர்