நேர்மைக்கு துன்பம் இல்லை
UPDATED : டிச 14, 2011 | ADDED : டிச 14, 2011
* அழுகிறவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.* மனிதனின் மனதிலிருந்து வெளிவருபவைகளே அவனை அசுத்தப்படுத்துகின்றன. அவன் தெய்வ நிந்தனை, அகங்காரம், மூடத்தனம் ஆகியவற்றின் கூட்டமைப்பாக இருக்கிறான்.* அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு அழிந்து நாசமாகிவிடும். நேர்மையானவர்களோ எப்பேர்பட்ட துன்பத்திலிருந்தும் விடுவிக்கப்படுவர்.* நாக்கு ஒரு சிறிய அங்கமாக இருந்தாலும் சிறிய விஷயங்களைக் கூட பிரமாதப்படுத்தி விடும். நாக்கிலிருந்து வரும் சொற்களே ஒருவனின் வாழ்வை நிர்ணயம் செய்யும்.* பலசாலியை விட கோபம் கொள்வதில் மிதமாய் இருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனைவிட தன் உணர்ச்சியை அடக்கி ஆள்பவனே சிறந்தவன்.* அடக்கு முறையில் நம்பிக்கை வேண்டாம்.உன்னிடம் பணம் பெருகுமானால் அதன் மீது உனது இதயத்தை வைக்காதே.-பைபிள் பொன்மொழிகள்